மாதுளையில் ( Pomegranate)

மாதுளையில் ( Pomegranate)

 இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
வறட்டு இருமலுக்கு தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அடிக்கடி மாதுளம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உண்டாகும். இதன் காரணமாக உடல் பலம், அறிவு வளர்ச்சி, நினைவாற்றல் ஏற்படும்.

எலும்புகள், பற்கள் உறுதிபடும். பித்த சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மாதுளம்பழத்தில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இதில் எல்லா வகையும் சத்துள்ளதே.

வைட்டமின் சி, மக்னீசியம், கந்தகம் ஆகிய சத்துக்கள் மாதுளையில் அதிகம்.

மாதுளையின் விதைக்குக் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்ச்சுருக்கு வயிற்று நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு.

தொடர்ந்து 3 நாட்களுக்கு அரை மாதுளம்பழம் பகல் உணவிற்குப் பின் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையின் மகத்துவம்

உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பழங்களில் ஒன்று மாதுளை. அனைவரும் விரும்பி சாப்பிடும் மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை. மேலும், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.

புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். தோலில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் பிரச்னை போன்றவற்றிற்கு சிறந்தது. பிளட் சர்குலேசனுக்கு ஏற்றது மாதுளை. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளம் பழத்தை நாமும் சாப்பிடலாமே.!
மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் வாந்தி, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தாகம், அதிதாகம், பித்தம், பித்தசுரம், மலட்டுத்தன்மை, உமிழ் நீர் அதிகச் சுரப்பு, விக்கல், மந்தம், செரியாமந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, பேதி, நெஞ்செரிச்சல், காதடைப்பு, மயக்கம், தீராத மயக்கம் ஆகிய அனைத்தும் நீங்கும்