எலுமிச்சைச் சாறு


1. வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.
2.பொதுவாக, புளிப்புத் தன்மைகொண்ட பழங்கள், ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன் டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆன்டி பாக்டீரியலாகவும் இருப்பதால், தோல் நோய்களை அண்ட விடாது.
3. காலையில் வெந்நீரில் 5 - 10 மி.லி. எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
4. வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்கச் சரியாகும்.
5. கபம் அதிகம் இருந்தால், காலையில் எழுந்ததும் சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள், 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் அய்ந்து மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். சட்டென நிவாரணம் கிடைக்கும்.
6. சிலருக்கு, வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்த மாக இருக்கும். இதற்குச் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மலச்சிக்கல் பிரச்சினையும் இருக்காது.
7. மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.