Good vaastu

வாஸ்து முறை

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள்.

முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

மோர் இன்றி அமையாது உலகு...!!!

மோர் இன்றி அமையாது உலகு...!!!
கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்...

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும் மோர்

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

திரிதோஷ சமனி

“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நீர் சுருக்கி, மோர் பெருக்கி

கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.

அனுபானம்

மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.

வெயில் காலங்களில்

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

நஞ்சகற்றி

மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

மோருடன் வரவேற்போம்

ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.

Health-ஐக் கொண்டு Wealth-ஐப் பெருக்க... 6 அற்புத வழிகள்!

Health-ஐக் கொண்டு Wealth-ஐப் பெருக்க... 6 அற்புத வழிகள்!காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்கும் வரை ஹெல்த் தொடர்பான பல விஷயங்களை தினமும் அக்கறையுடனும் ஆர்வமுடனும் செய்துவருகிறோம். ஆனால், நலம் பெற்ற வாழ்க்கை வளம் பெற, நிதி சார்ந்த விஷயங்களை எவரும் செய்வதில்லை. உடலுக்கான ஹெல்த் எவ்வளவு அவசியமோ, அதேபோல எதிர்காலத்துக்கான வெல்த்தும் அவ்வளவு அவசியம்.

ஹெல்த்தைக்கொண்டு வெல்த்தைப் பெருக்கிட இதோ அற்புதமான ஆறு வழிகள்...

1. தினமும் அதிகாலையில் எழுவதால் கோடி நன்மைகள் என்பார்கள். அதைப்போல நம் வாழ்க்கையை வளமாக்கிட ஆரம்ப காலத்திலிருந்தே முதலீட்டைத் தொடங்குங்கள். முதலீடு என்றதும் லட்சக்கணக்கில்தான் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. குழந்தைகளுக்கு உண்டியல் ஒன்றை அளித்து அதில் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமிக்கக் கற்றுத்தருகிறோம். இதைப்போல, ஆரம்பகாலத்திலிருந்ததே விருப்பமான நிதி சார்ந்த திட்டத்திலான முதலீட்டை சிறுகச் சிறுக மேற்கொள்ளுங்கள்.

2. ஆரோக்கியமான வாழ்வுக்குச் சீரான உணவு அவசியம். அதைப்போல, நம்முடைய சந்தோஷமான வாழ்க்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலீடு பன்முகத்தன்மையுடன் (Diversification) இருப்பது நல்லது. அதாவது முதலீட்டைப் பொறுத்தவரை தங்கத்தில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ளாமல் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட் எனப் பல வகையான முதலீட்டுச் சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்வது நல்லது.

3. கோபம், மன அழுத்தம், இதயநோய், ரத்தக்கொதிப்பு போன்று உடலில் எந்த மாதிரியான பிரச்னைகளும் வரக்கூடும் என்பதைப் பெரிய பட்டியலிடலாம். உடல்நலத்தில் மட்டுமல்ல, முதலீட்டு முறைகளிலும் கோபத்தைத் தவிர்த்து பொறுமையுடன் முதலீடு செய்வது அவசியம். முதலீட்டில் லாபம் வந்தால் சந்தோஷப்படுவதைப்போல, நஷ்டம் வந்தால் ஏன் வந்தது, எதனால் வந்தது, எப்படி வந்தது என அலசி ஆராய்ந்து பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.

4. எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் தினம்தோறும்  உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், பலன் இருக்காது. உடற்பயிற்சிபோலவே தினந்தோறும் முதலீடு மேற்கொள்வது என்பது சாத்தியமில்லை. குறைந்தது உங்களுக்கு விருப்பமான முதலீட்டு சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

5. `தண்ணீரை தினமும் போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சருமமும் வறட்சியின்றி மென்மையாக இருக்கும்' என்பார்கள். இதைப்போல, போதுமான அளவு பணத்தை கையிருப்பாக வைத்திருப்பது நல்லது. என்னதான் லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும் அந்தப் பணத்தை அவசரத்தேவைக்காக வைத்திருப்பது நல்லது.

6. நம்முடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனே குடும்ப மருத்துவரை அணுகுவதைப்போல, நிதி சார்ந்த விஷயங்களில் சந்தேகம் அல்லது பிரச்னைகள் எனில், அது தொடர்பான ஃபைனான்ஷியல் டாக்டரை அணுகுவதே நல்லது. ஏனெனில், பணத்தைச் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல, அதை மிச்சப்படுத்தவும் நிதி தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை அவசியம்.

எந்த வயது, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பிசினஸில் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

பிசினஸில் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, பொருள்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது, எத்தனை சிறப்பான விஷயங்கள் உங்கள் தயாரிப்பில் இருந்தால் எனக்கென்ன... விலையைச் சொல்லுங்கள். அதுதான் நான் வாங்குவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் விஷயம் என்று சொல்லும் வகை.

இரண்டாவது, உங்கள் தயாரிப்பில் என்ன இருக்கிறது என்றெல்லாம் கவலையில்லை. விலையைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், உடனே வேண்டும் என்னும் ரகம்.

மூன்றாவது வகை... பொருள் கிடைத்தால் போதும்; சர்வீஸ், உதிரிப்பாகங்கள் பற்றிக் கவலை இல்லை என்பதே.

நான்காவது ரகம்... தரம், சர்வீஸ், ஸ்பேர்கள் கிடைத்தல், சரியான சமயத்தில் கிடைத்தல் என எல்லா விஷயங்களிலும் கறாராகப் பேசும் கூட்டம். இவர்களும் விலையைப் பற்றிக் கவலைப்படாத வர்கள்.

இப்படி நான்கு வகை வாடிக்கையாளர்கள் இருக்க, பொத்தாம்பொதுவாக ஒரு சிலரிடம் கேட்டுவிட்டு  நிறுவனம், உற்பத்தி மற்றும் விலை முடிவுகளை எடுப்பது தோல்வியையே தரும்.

இந்தத் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 

கிரெடிட் கார்ட் பற்றி அறிய வேண்டிய அடிப்படை தகவல்கள்

கிரெடிட் கார்ட் பற்றி அறிய வேண்டிய அடிப்படை தகவல்கள்


ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம், அவர்களுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் அட்டையே `கிரெடிட் கார்டு'. வாடிக்கையாளர் ஒருவர், இதைப் பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கவோ அல்லது சேவையைப் பெறவோ இயலும். ஒரு வாடிக்கையாளர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை முன் பக்கம், பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் பல தகவல்கள் உள்ளன. முன் பக்கத்தில் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் பெயர், வணிகச் சின்னம், க்ளியரிங் நெட்வொர்க்கின் பெயர் (விசா அல்லது மாஸ்டர் கார்ட்), கார்டு வாங்கியவரின் பெயர், கார்டின் எண், அந்த கார்டு காலாவதியாகும் தேதி போன்ற பல தகவல்கள் இருக்கும்.

கிரெடிட் கார்டின் பின் பக்கம், கறுப்பு நிறக் காந்தப்பட்டை இருக்கும். இது மிகவும் முக்கியமானது. இந்தக் காந்தப்பட்டையில் கிரெடிட் கார்டு வாங்கியவரின் பெயர், கார்டின் எண், கார்டு செல்லுபடியாகும் காலம், கடன் எல்லையின் அளவு, கார்டு வெரிஃபிகேஷன் கோட், வங்கி குறித்த தகவல்கள்... எனப் பல விவரங்கள் இருக்கும். ஆனால், இந்தக் காந்தப்பட்டையில் `வாடிக்கையாளரின் ரகசியக் குறியீட்டு எண்' எனச் சொல்லப்படும் பின் (PIN) நம்பர் இருக்காது.

கிரெடிட் கார்டு என எடுத்துக்கொண்டாலே, அதில் 16 இலக்க எண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதில் முதல் இலக்கம் க்ளியரிங் நெட்வொர்க்கைக் குறிக்கிறது. அதாவது, கிரெடிட்  கார்டின் முதல் இலக்க எண் `3' ஆக இருந்தால், அது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அல்லது டைனர்ஸ் க்ளப் போன்ற பயண உதவி நிறுவனங்களால் வழங்கப்பட்டது. இதுவே கிரெடிட் கார்டின் முதல் இலக்க எண், `4' ஆக இருந்தால், அது விசா நிறுவனத்தால் வழங்கப்பட்டது. `5' ஆக இருந்தால், அந்த கார்டை மாஸ்டர் கார்ட் நிறுவனம் வழங்கியது என்றும், `6' ஆக இருந்தால், டிஸ்கவர் என்ற நிறுவனம் வழங்கிய கார்டு என்றும் பொருள்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, மற்ற எண்கள் வங்கியின் பெயர், பிராந்தியம் மற்றும் வாடிக்கையாளர் குறித்த தகவல்களைக் குறிக்கும்.

கிரெடிட் கார்டின் பின் பக்கத்தில் உள்ள காந்தப்பட்டையின் அருகில் வாடிக்கையாளர் கையொப்பம் இடுவதற்கான பகுதி ஒன்று இருக்கிறது. இந்தக் கையொப்பம் எதற்கு என்று தெரியுமா? நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்றால், அவர்கள் வழங்கும் பில்லில் உங்களுடைய கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இந்தக் கையெழுத்து பயன்படுகிறது.

கிரெடிட் கார்டில் கையெழுத்திடும் இடத்தின் அருகில், மூன்று எண்கள் இடம்பெற்றிருக்கும். இந்த எண்கள் `Customer Verification Value (CVV) எண்' எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த எண், கிரெடிட் கார்டைப் பாதுகாக்கும் ஓர் அம்சமாகக் கருதப்படுகிறது. கிரெடிட் கார்டு மூலமாக இன்டர்நெட் வழியே பொருள்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டின் முன் பக்கத்தில் உள்ள எண்ணோடு, இந்த CVV எண்ணையும் பயன்படுத்தியே பொருள்களை வாங்க முடியும். இந்த எண் மிக மிக அவசியம்.

ஏனெனில், உங்களுடைய கிரெடிட் கார்டில், முன் பக்கம் மற்றும் பின் பக்கம் உள்ள இரண்டு எண்களையும் தெரிந்துகொண்டு, யார் வேண்டுமானாலும் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இன்டர்நெட் மூலம் பொருள்களோ அல்லது சேவைகளையோ பெற முடியும். ஆகையால், கிரெடிட் கார்டைக் கொஞ்சம் கவனத்துடன் பயன்படுத்துவது நல்லது.

இந்த நிலையில் கிரெடிட் கார்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் பேசினோம்.

விஜயகுமார், கிரெடிட் கார்டு"வங்கிகளில் விசா, மாஸ்டர் கார்டு என பிரித்து தருவது எல்லாம் வங்கிகள் வேலை. வங்கிகள், வாடிக்கையாளரைப் பொறுத்து விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு என எந்த கார்டுகளை வேண்டுமானாலும் வழங்கலாம். அதேநேரம் வாடிக்கையாளர்கள், எந்த கார்டு வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்களோ, அந்த கார்டுகளைத் தாராளமாக கேட்டுப் பெறலாம். விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் எல்லாம் ஒரு சில வசதிகள் மாறுபடும். எல்லா கார்டுகளும் இலவசமாக வராது. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வங்கிகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற வேண்டும்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். ஆனால், உள்ளூரில், சிறு நகரங்களில் இந்த கார்டைப் பயன்படுத்த முடிவதில்லை. எல்லா கார்டும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. ஆகையால் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து வங்கிகள், ஏற்ற கிரெடிட் கார்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் பெரிய வித்தியாசம் என்றால் எதுவுமில்லை. எனினும் உலகம் முழுவதும் பெரும்பாலும் மாஸ்டர் கார்டு எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் வித்தியாசம் என்னவென்றால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் கொஞ்சம் மேலும், கீழும் இருக்கும், அவ்வளவுதான்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கிரெடிட் கார்டை பெயர் தெரியாத, சிறிய நிறுவனங்களில் எல்லாம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதுபோன்ற ஒரு சில நிறுவனங்கள் மோசடி நிறுவனங்களாக இருப்பதால் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டில் Expiry Date, CVV போன்ற விவரங்களைக் கண்ட இடங்களில் எழுதிவைக்காமலும், யாரிடம் சொல்லாமலும் இருப்பது நல்லது.

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையின் போது மொபைல் எண்ணில் கிடைக்கப் பெறும் OTP எண்ணைப் பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. 

ஒரு போட்டோகிராபரின் வெற்றிக் கதை! பாண்டியராஜன்.

‘‘வித்தியாசமான அணுமுறைதான் என்னைத் தொழிலில் ஜெயிக்க வைத்தது!’’

ஒரு போட்டோகிராபரின் வெற்றிக் கதை! பாண்டியராஜன்.


இளம் வயதில் வருகிற உண்மைக் காதல், சிலருக்கு நல்ல வெற்றிப் பாதைகளை வகுத்து தரும் என்பதற்கு நல்லதொரு உதாரணமாக இருக்கிறார் க.பாண்டியராஜன். சாத்தூரில் துருவன் மாடலிங் ஸ்டுடியோ வைத்திருக்கும் அவரைச் சந்தித்தோம். ஓர் திருமண புகைப்படத்தை கணினியில் எடிட் (Edit) செய்து கொண்டே நம்முடன் பேசினார் அவர்.

“எனக்கு சொந்த ஊர் சாத்தூர் அருகிலுள்ள சத்திரப்பட்டி எனும் கிராமம். என் அப்பா ஒரு டிரைவர். என் ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் என் அம்மா இறந்துவிட்டார். பின் வறுமையின் காரணமாக ஊரில் கோயில் மணி தயாரிக்கும் ஒரு கம்பெனியில் சிறிது காலம் வேலை பார்த்தேன். பின் கேரளாவுக்கு கடலை மிட்டாய் கம்பெனிக்கு சென்றுவிட்டேன். அங்கு காலை ஐந்து  மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை இருக்கும். பல கஷ்டங்களை நான் அப்போது அனுபவித்தேன்.

என் 16 வயதில் தந்தைக்கும் எனக்குமான கருத்து வேறுபாட்டில் தனி வீடு பிடித்து சென்றுவிட்டேன். பின்பு, பணம்தான் வாழ்க்கை போல என நினைத்து பல வேலைகளை செய்தேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து சாப்பாடு செய்து, ஆறு மணிக்கு முறுக்கு கம்பெனிக்கு சென்றுவிடுவேன். அங்கு காலை முறுக்கு உற்பத்தி செய்வோம். மதியம் 2.30 மணியிலிருந்து கடைக்கு விநியோகிக்க சென்றுவிடுவேன். இரவு 7.30 மணிக்கு தீப்பெட்டி ஆபிஸுக்குச் சென்று இரவு 12 மணி வரை வேலை பார்ப்பேன்.

எனக்கென்று எந்த சொந்தபந்தமும் இல்லை. என் மீது பாசம் காட்ட யாருமில்லாதபோது என் மீது தோழமை காட்டினார்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள். அங்குதான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பின்பு, பிரியா ஸ்டுடியோவுடன் எனக்குத் தொடர்பு கிடைத்தது. அங்கு கார்த்தி அண்ணன்தான் என்னைப் புரிந்துகொண்டு, என் ஸ்டுடியோ வாழ்க்கைக்கான அடிதளத்தை அமைத்துக் கொடுத்தார். எனக்குப் புகைப்படம் எடுப்பதற்கும், நல்ல உடை அணிவதற்கும் கற்றுக் கொடுத்து என் வாழ்வை மாற்றிய மறக்க முடியாத நபர்.

சின்னச் சின்னதாக நான் செய்த வேலைகள் போக மீதமுள்ள நேரத்தில் வாலிபர் சங்கத்துக்காக செலவழித்தேன். அப்போது, வாலிபர் சங்கத்தின் பெண் தோழியராக இருந்த பாண்டிசெல்வியின் நட்பு எனக்குக் கிடைத்தது. பின்பு அது காதலாக மாறியது. அதுவரை எனக்கென்று யாருமில்லை. இனி என் காதலிக்காக சொந்தத் தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

2009-ல் என் சொந்த பணம் ரூ.1500 மற்றும் தோழர் கருணாமூர்த்தியிடம் ரூ.25,000 கடன் பெற்று, கேமிரா வாங்க நினைத்தேன். என் நண்பர் ஆண்டனிதான் எனக்கு கேமரா வாங்கித் தர உதவினார். நிக்கான் கேமிராவின் விலை ரூ.32,000 என்றார்கள். அவ்வளவு என்னிடம் இல்லை என்றதுடம், நண்பர் ஆண்டனி, மீதப் பணத்தை தந்து கேமிராவை வாங்கித் தந்தார்.

2010-ல் தனியாக ஒரு அறை எடுத்து, நிறைய நண்பர்களின் உதவியுடன் கல்யாண ஆர்டர்கள் எடுத்து அதை சரியாக செய்து கொடுத்தேன். இந்த சமயத்தில் என் காதலி பாண்டிசெல்வி, மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கச் சேர்ந்தாள். ஃபோட்டோ பிரிண்ட் போடுவதாகச் சொல்லி அவளைப் பார்க்க அடிக்கடி செல்வேன்.

நான் எடுத்த போட்டோக்களை குளோ (GLO) மற்றும் தினேஷ் (Dhinesh) கலர் லேப் சென்று பிரிண்ட் போடச் செல்வேன். அங்குதான் பல வகையான ஃபோட்டோக்களை பார்த்து என் புகைப்படம் எடுக்கும் முறையினைக் கற்றுக்கொண்டேன்.

2011-ல் தனி ஸ்டுடியோ சாத்தூரில் ஆரம்பித்தேன். அங்கிருந்த தொழில் போட்டி என்னை மேலும் வளர்ச்சி அடைய செய்தது. என் காதலி கல்லூரிப் படிப்பு முடித்தபின், இனி அவளைப் பார்க்க முடியாதோ என்று நினைத்தேன். உடனே, சிவகாசியில் 2015-ன் ஆரம்பத்தில் தனி ஸ்டுடியோ ஆரம்பித்தேன்.

சிவகாசியில் ஸ்டூடியோ ஆரம்பித்தபிறகுதான் எனக்குப் பெரிய ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. இதன்பிறகுதான் என் ஸ்டூடியோ நியூ ஜெனரேஷன் ஃபோட்டோகிராபியாக (New generation photography) மாற்றம் அடைந்தது. எனக்கு வரும் திருமண போட்டோக்களை வித்தியாசமாக எடுத்துத் தந்தேன். வித்தியாசமான அணுகுமுறைதான் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். இன்று பலரும் என்னைத் தேடி வருகிற அளவுக்கு என்னை நான் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன். என்னை ஜெயிக்க வைத்தது என் காதல்தான்’’ என்று முடிக்கிறார் பாண்டியராஜன்.

செய்யும் தொழிலை வித்தியாசமாக,  ரசித்து செய்தால் நிச்சயம் வெற்றிதான் என்று சொல்லும் இவர் இன்னும் புதிய உயரத்தை எட்டட்டும்! 

ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும் அ.மணிபாரதி.

‘‘ஆர்வமாகச் செய்தேன், தொழிலில் ஜெயித்தேன்!’’

கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும்  அ.மணிபாரதி.
படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்பார்கள். ஆனால், எந்தவொரு தொழிலையும் ஆர்வத்துடன் செய்தால், அந்தத் தொழிலை சொந்தமாகத் தொடங்கி, அதில் நிச்சயம் ஜெயிக்கவும் செய்யலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம், கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும்  அ.மணிபாரதி.

இந்தத் தொழில் அவர் ஜெயித்தது எப்படி என்பதை அவரே சொன்னார்.

எனக்கு சொந்த ஊர் கோவில்பட்டி. என் அப்பா அமல்ராஜ் ஓவியர். நான் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் படித்தேன். நான் படித்த படிப்பு சம்பந்தமான தொழிலில் செய்ய வேண்டும் என்று நினைத்து, இசி-டெக் (EC-TECH) எனும் எடை கருவி தயாரிக்கும் கடையில் மாதம் ரூ.5,000-த்துக்கு வேலைக்குச் சேர்ந்தன். அந்த வேலை எனக்கு ஒத்துவரவில்லை என இரண்டு மாதங்களில் அந்த வேலையை விட்டுவிட்டேன்.

பின்பு வங்கித் தேர்வுகளுக்குப் படிக்க ஆரம்பித்தேன். நன்றாகப் படித்தால், தேர்விலும் வெற்றி பெற்றேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கவில்லை.

பின்பு, என் தந்தை சொந்தத் தொழில் தொடங்கலாம் என அறிவுரை கூறினார். எனக்கு பைக் என்றால் ரொம்பப் பிரியம். எனவே, வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் தொடங்கலாம் என கலந்து ஆலோசித்தோம். எனினும் எனக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி எதுவும் தெரியாது. எனவே, ஸ்டிக்கர் தயாரிப்பது எப்படி என்று என் தந்தை இரண்டு நாள் சொல்லித் தந்தார். அதனுடன் அவரது நண்பர் சங்கர் என்பவரிடம் ரூ.2,00,000 கடன் வாங்கிக் கடையை ஆரம்பித்தேன்.

பின்பு, நானாக ஒவ்வொரு விஷயத்தையும் சொந்தமாகக் கற்றுக்கொண்டேன். அழகாக ஸ்டிக்கர் ஒட்டி கஷ்டமர்களைக் (Customer) கவர்ந்தேன். என் வித்தியாசமான ஸ்டிக்கர்களைப் பார்த்து, என்னைத் தேடி நிறைய பேர் வர ஆரம்பித்தனர். அதே நேரத்தில் புதிய மாறுதல்களை என்னிடம் கேட்டனர். அதன்படி பைக் உருமாற்றம் (bike modification) செய்து தர ஆரம்பித்தேன்.

பின், 2015-ல் கார்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பித்ததேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாள் முழுக்கவே இந்த வேலை பிசியாக இருக்கும். ஒரு நாளைக்கு ஸ்டிக்கர் பொருட்களுக்கான செலவுகள் போக ரூ.2,000 வரை எனக்கு வருமானம் கிடைக்கும்.

இதனால், 2015-ல் இன்னொரு கடையையும் ஆரம்பித்தேன். குறைந்தது 1000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நான் ஸ்டிக்கர் செய்து தந்திருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் பல கிளைகளை தொடங்க வேண்டும் என்கிற லட்சத்துடன் உழைத்து வருகிறேன்’’ என்றார்.

வித்தியாசமாக செய்தால், வாடிக்கையாளர்கள் கவனம் நிச்சயம் கிடைக்கும். அதன் மூலம் தொழிலில் ஜெய்க்க முடியும் என்பதை தனது பிசினஸ் சீக்ரெட்டாகக் கொண்டு செயல்படும் மணிபாரதி இன்னும் புதிய உயரங்களை எட்டட்டும்.

அங்கீகாரமற்ற வீட்டு மனை வரைமுறை - தமிழக அரசு புதிய விதிமுறைகள்

அங்கீகாரமற்ற வீட்டு மனை வரைமுறை - தமிழக அரசு புதிய விதிமுறைகள்தமிழக அரசு இன்று (மே 5, 2017) அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது. அது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்துள்ள அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதிமுறை -2017 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், டவுன் பஞ்சாயத்தில், செயல் அதிகாரியும், கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் இந்த நிலங்களை வரையறை செய்யும் தகுதியான அதிகாரிகள் ஆவார்கள்.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தின் உரிமையாளர்களும் இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து, தங்களது நிலத்தை வரையறை செய்து கொள்ளலாம்.

இந்த நிலங்கள் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும். இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும்.

அதன்படி, மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 வீதமும், நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 60 என்றும் கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 30 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத இந்த வீட்டு மனைகளில் மேம்படுத்துவதற்கு என்று தனி கட்டணமும் செலுத்த வேண்டும். மேம்பாட்டு கட்டணமாக, மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 600, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 350, முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 250, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 100 என்றும் செலுத்த வேண்டும்.

MRF - ரூ.500-லிருந்து ரூ.68,000-த்துக்கு... வயிற்றெச்சலைக் கிளப்பும் பங்கு!


MRF - ரூ.500-லிருந்து ரூ.68,000-த்துக்கு... வயிற்றெச்சலைக் கிளப்பும் பங்கு!


சில பங்குகளின் விலையைப் பார்த்தால், ‘அடடா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அந்தப் பங்கை வாங்கித் தொலைச்சிருக்கலாமே!’ என்று நினைத்து, புலம்பித் தீர்ப்போம். அப்படி பலரையும் புலம்ப வைத்த ஒரு பங்கு என்றால், அது எம்.ஆர்.எஃப். டயர் பங்கைச் சொல்லலாம். வெறும் 500 ரூபாயில் வர்த்தகத் தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை ரூ.68,000.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவில் டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி லிமிடெட் (எம்ஆர்எஃப்) செயல்பட்டு வருகிறது. டயர், டியூப் மற்றும் கன்வேயர் பெல்டுகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்திய டயர் நிறுவனங்களில் முக்கியமானது எம்ஆர்எஃப். இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வகையான வாகனங்களிலும் நல்ல வளர்ச்சி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக டயர்களின் தேவை அதிகரித்து வருவதும், டயர் தயாரிப்புக்கான மூலப்பொருளின் விலை குறைவாக இருப்பதும் இந்த நிறுவனத்துக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துத் தந்தது. இதனால் இந்தப் பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்து, அனைவரையும் நோகடித்தது.

இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு என்றால் அது எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்குதான். 2000-ம் ஆண்டில் எம்ஆர்எஃப் பங்கின் விலை கிட்டத்தட்ட 2,300 ரூபாய்.  2001 ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் பங்கின் விலை குறைந்து வெறும் ரூ.455-க்கு வர்த்தகமானது. ஆகக் குறைந்த அந்த விலையைத் தொட்டபின், இந்தப் பங்கின் விலை ஜிவ்வென்று உயர ஆரம்பித்தது.


2004-ல் ரூ.2,500-யைத் தொட்டது. 2008-ல் ரூ.8,000-ஆக உயர்ந்தது. 2010-ல் ரூ.6,000-ஆகக் குறைந்தது. 2013-ல் ரூ.13,000-ஆக உயர்ந்தது. 2015-ல் ரூ.38,000 ஆனது. தற்போது, 68,000 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 2020-ல் எம்ஆர்எஃப் பங்கு ஒன்றின் விலை ரூ.1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனாலும் ஆகலாம்.

ஆரம்பத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்கின் விலை 500 ரூபாய் என்று இருக்கும் போது, குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு முதலீடு செய்து இருந்தால் இன்றைய நிலவரப்படி அதன் மதிப்பு 6,84,000 ரூபாய் எனப் பல லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும்.

எம்ஆர்எஃப் நிறுவனம் மட்டுமில்லை, இதனைத் தவிர ஐஷர் மோட்டார்ஸ் (ரூ.25,840), போஷ் (ரூ.23,203) உள்ளிட்ட சில நிறுவனத்தின் பங்குகளும் அதிக விலையில் வர்த்தகமாகி வருகின்றன. பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதே முக்கியம். பங்கின் விலை 10 ரூபாய், 100 ரூபாய் 1,000 ரூபாய் என எப்படி இருந்தாலும் எத்தனைச் சதவிகிதம் லாபம் என்பதுதான் முக்கியம்.

நல்ல பங்கில் முதலீடு செய்து, அதை நீண்ட காலத்துக்கு வைத்திருந்தால், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எம்.ஆர்.எஃப். பங்கு ஒரு நல்ல உதாரணம்!

சம்பள உயர்வுக்கு 10 வழிகள்!

சம்பள உயர்வுக்கு 10 வழிகள்!
இந்த நிதி ஆண்டில் எவ்வளவு சம்பள உயர்வு இருக்கும் என்பதை இப்போது யோசிக்கத் தொடங்கி இருப்போம். சம்பள உயர்வை எந்த வகையில் உயர்த்துவது என்று யோசிப்பவர்கள் பின்வரும் பத்து விஷயங்களைப் பின்பற்றலாமே...

1 ஆவணப்படுத்துங்கள்: அலுவலகம் தொடர்பான உங்கள் வேலைகள்  அனைத்தையும் ஆவணங்களாக வைத்திருங்கள்: நீங்கள் என்னென்ன வேலைகளைப் பார்த்தீர்கள், என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள் என்பதைக் கையில் கோப்புகளாகவும், ஆவணங்களாகவும் வைத்திருந்தால், சம்பள உயர்வு பற்றி ரெவியூ செய்யப்படும் போது அவற்றைக் கொடுத்து அசத்தலாம். சம்பள உயர்வு  கிடைக்க இது பேருதவியாக இருக்கும். இந்த ஆவணங்களை எல்லாம் பார்த்தபின் உங்கள் உயர் அதிகாரிகள், நீங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று நிச்சயமாகச் சொல்ல மாட்டார்கள். இந்தப் பதவியிலேயே இவ்வளவு பக்காவாக இருக்கும் உங்களுக்கு ஏன் பதவி உயர்வு தரக்கூடாது என்று நினைப்பார்கள்.

2 சுயமதிப்பீடு: தன்னம்பிக்கையுடன் உங்களைப் பற்றி நீங்களே சுயமதிப்பீடு செய்யுங்கள். அது நீங்கள் உங்கள் நிறுவனத்தில், உங்களுடைய குழுவில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், உங்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு தரலாம் என்பதையும் உணர வைக்கும். இதன் மூலம், உங்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக நீங்கள் யாரையும் குற்றம்சாட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

3 உங்கள் தலைமையுடன் இணக்கம்: ஒருவேளை, நீங்கள் உங்களுடைய தலைமையுடன் முரண்பட்டு இருந்தால், உங்களது  விடாமுயற்சி யும், உங்களுடைய கடின உழைப்பும் விழலுக்கு இறைத்த நீர் போலாகிவிடும். அவர்தான் இறுதியில் சம்பள உயர்வைத் தீர்மானிப்பவராக இருப்பார்.

4 அணியில் முக்கியமான ஒருவராக இருங்கள்: உங்கள்  அணியில் உள்ளவர்களுடன் இணைந்தும், அவர்களுக்கு உதவி செய்வதையும், வழிகாட்டுவதையும் முக்கிய பழக்கமாக வைத்திருங்கள். இது முக்கியமான தருணத்தில் சராசரி சம்பளத்தைவிட அதிகமான சம்பளத்தைப் பெற்றுத் தரும்.

5 உங்களுடைய எதிர்கால இலக்கை நிர்ணயுங்கள்: உங்களுடைய அடுத்த வருட இலக்கை, உங்களுடைய தலைமை அதிகாரியுடன் உட்கார்ந்து விவாதியுங்கள். இது உங்களுக்கு நிறுவனத்தின் மீதுள்ள விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் உணர வைக்கும். இது உங்களுக்கு நல்ல மதிப்பையும், சம்பள உயர்வையும் பெற்றுத் தரும்.

6 முக்கிய நடவடிக்கையில் பங்கு பேறுங்கள்: உங்கள் வேலை களில் நீங்கள் வளைந்துகொடுக்கும் போது உங்கள் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்துவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் பல்வேறு பணிகளைச் செய்பவராகவும், நம்பகமானவராகவும் இருந்தால், உங்களுடைய மதிப்பு உயர்ந்து, தானாகவே சம்பளம் உயரும்.

7 உங்கள் வேலையைப் பற்றி, தலைமைக்கு தொடர்ந்து தெரிவியுங்கள்: நீங்கள் சரியான திசையில் பயணித்து வருவதையும், ஏதேனும் தடைகள் இருந்தால், அதில் இருந்து விடுபட்டு வெளியே வருவதற்கும் தொழில் முறையில் பணியை மதிப்பீடு செய்வது அவசியமாகிறது. இந்த மதிப்பீட்டுப் பயிற்சியின் மூலம் உங்கள் தலைமைக்கு நீங்கள் செய்யும் பணிகளைத் தெரிவிப்பதோடு, அவர்களுடைய மனதில் உங்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்கிற எண்ணத்தையும் உருவாக்குவீர்கள்.

8 திறமையை மேம்படுத்துங்கள்: சமீபத்திய  முன்னேற்றங் களுக்குத் தகுந்தாற்போல் தொடர்ந்து உங்கள் திறமையை யும் மேம்படுத்திக்கொள்ள  வேண்டும். இதன் மூலம் மற்றவர்களைவிட நீங்கள் முன்நிற்கவும், நிறுவனம் உங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் இருக்கும்.

9 தீர்வு காண்பவராக இருங்கள்: நிறுவனத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வினைக் கண்டறிந்து சொல்பவராக இருங்கள். அப்போது நிறுவனத்தில் உங்கள் மீது மதிப்புக் கூடும். மேலும், உங்களை நிறுவனத்தின் தலைமை, நட்புடன் வைத்திருக்கும். ஊதிய உயர்வும் உங்களுக்குச் சாதகமாகும்.

10 வேலையில் அர்ப்பணிப்பு: வேலையில் பொறுப்புமிக்கவராக வும், சரியான நேரத்தில் அலுவல கத்துக்கு வருபவராகவும் இருங்கள். காலக்கெடுவுக்கு முன்பே அனைத்துப் பணிகளையும் முடித்துத் தருபவராக இருங்கள். நேரம் தவறாமை உங்களைக் கடமை உணர்வு கொண்டவராகவும், வேலையில் பொறுப்பு மிக்கவராகவும் காண்பிக்கும்.

இந்த 10 விஷயங்களையும் பின்பற்றினால், சம்பள உயர்வு  உங்களைத் தேடி தானே வரும்.

தொழில் தொடங்க - செட்டி நாடு சிமென்ட் முத்தையா சொல்லும் 10 ஆலோசனைகள்

தொழில் தொடங்க விருப்பமா? செட்டி நாடு சிமென்ட் முத்தையா சொல்லும் 10 ஆலோசனைகள்


தொழில் தொடங்க - செட்டி நாடு சிமென்ட் முத்தையா சொல்லும் 10 ஆலோசனைகள்

பெண்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வெற்றி பெறலாம்.


செட்டிநாடு குழும மேலாண் இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா நிகழ்த்தினார். தொழில் செய்ய விரும்புகிறவர்கள் அவர் 10 ஆலோசனைகளை அளித்தார்.

1. தொழில் முனைய விரும்புவர் முதலில் தன்னைத்தானே மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். பின்னர், சரியான தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்யும் யுக்தி தெரிந்திருக்க வேண்டும்.

3. எந்தத் தொழிலும் லாபகரமானதுதான். தொழில் செய்ய சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டியது மிக முக்கியம்.

4. தொழிற்சாலைகளில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களையே நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் தொழிலை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

5. நிதி நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்து கம்பெனியின் வரவுசெலவுகளை முறைப்படுத்தலாம்.

6. சிறிய அளவில் வர்த்தகம் தொடங்கினாலும், அதனை காலப்போக்கில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடுத்தான் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.

7. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாதவர்கள் சிறிய அளவில் வர்த்தகம் செய்வதைவிட நல்ல சம்பளத்தில் வேலைக்குச் செல்வது லாபகரமாக இருக்கும்.

8. வெற்றிகரமான தொழிலதிபராக வேண்டும் என்றால் வர்த்தக நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடியாக இருக்க வேண்டும்.

9. தொழிலில் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வுடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும் இருக்க வேண்டும்.

10. தொழில் செய்ய விரும்புகிறவர்கள் இந்த விஷயங்களை அடிப்படைக் கொள்கைகளாக கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த 15 விஷயம் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா? உசுரே போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க

இந்த 15 விஷயம் ஒரு பொண்ணுக்கிட்ட இருந்தா? உசுரே போனாலும் மிஸ் பண்ணிடாதீங்க! சிறந்த காதலிக்கு இருக்க வேண்டிய முக்கியமான 15 குணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
இந்த 15 குணங்களுடன் ஒரு பெண் கிடைத்தால் அந்த பெண்ணை தவற விட்டுவிடாதீர்கள்...

ஒரு பெண்ணை காதலிக்கலாம வேண்டாமா என்ற யோசனையா? இதோ இந்த 15 குணங்களுடன் ஒரு பெண் கிடைத்தால், தயவு செய்து அந்த பெண்ணை தவற விட்டுவிடாதீர்கள்...

1. உங்கள் விருப்பமே அவர் விருப்பம்

உங்கள் விருப்பமே அவர் விருப்பம் உங்களுக்கு பிடித்த சினிமா, நீச்சல் என இருவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் பிடித்திருக்கும். உங்கள் இருவரது கண்ணோட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். இருவரது கருத்துக்களும் 90% ஆவது ஒத்துப்போகும்.

2. உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார்

 உங்கள் வேலையில் மூக்கை நுழைக்கமாட்டார் உங்களது பொழுதுபோக்கு மற்றும் உங்களுக்கு பிடித்த நல்ல காரியங்களை செய்யும் போது உங்கள் பாதையில் குறுக்கிடாமல் இருப்பார்.

3. கஷ்டத்தை கூறுவார்

 கஷ்டத்தை கூறுவார் யாரும் எல்லா நேரமும் சந்தோஷமாக இருப்பது இல்லை. அந்த பெண் ஏதேனும் ஒரு காரணத்தால், சோகமாக இருந்தால் அதற்கான காரணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

4. உங்களை நேசிக்கும் பெண்

 உங்களை நேசிக்கும் பெண் உங்களை மட்டும் காதலிப்பார். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து காதலிக்கமாட்டார். பல பிரபலங்கள் இது போன்ற குணம் கொண்ட பெண்களை தான் விரும்புகிறார்களாம்.

5. உங்களை மாற்ற நினைக்கமாட்டார்

 உங்களை மாற்ற நினைக்கமாட்டார் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அப்படியே ஏற்றுக்கொள்வார். உங்களை மிஸ்டர்.பெர்பெக்ட்டாக மாற்ற எண்ணி உங்களுக்கு மிகவும் பிடித்த காரியங்களுக்கு தடை போடமாட்டார். பிடிக்காத விஷயங்களை செய்ய வலியுறுத்தமாட்டார்.

6. தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண்

தனது அழகில் தன்னம்பிக்கை உள்ள பெண் அடிக்கடி தனது ஸ்டைலை மாற்றி அமைக்கமாட்டார். குண்டாக இருக்கிறோமோ என்று ஜிம்மிற்கு செல்வது, டயட்டில் இருப்பது போன்ற காரியங்களில் அதீத கவனம் செலுத்தமாட்டர். நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் அழகு என தன்னம்பிக்கையுடன் இருப்பார்.

7. உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்

 உங்கள் ஓய்வு நேரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார் உங்களது ஓய்வு நேரத்தில் நீங்கள் தனக்காக இதை இதை செய்ய வேண்டும் என அறுபது டஜன் லிஸ்ட்டுகளை போட்டு கையில் தரமாட்டார். உங்களது ஓய்வு நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய அனுமதிப்பார்.

 8. உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார்

 உங்கள் மதிப்பை பகிர்ந்து கொள்வார் இருவருக்கும் ஒருவரிடம் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருக்கும். உங்களது உறவில் போதுமான அளவு நேர்மை இருக்கும். மேலும், பணத்தை இருவரும் எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பது அவசியம். நீங்கள் கஞ்சமாகவோ அல்லது அதிகம் செலவு செய்பவராகவோ இருக்கலாம், உங்களை போலவே அவரும் இருக்கிறாரா என்பது அவசியம்.

9. வெளிப்படையாக இருக்கும் பெண்

 வெளிப்படையாக இருக்கும் பெண் அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட பிரச்சனைகள், கஷ்டங்கள், நிறைவேறாத ஆசைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். எந்த ஒரு கவலை, சோகத்தையும் உங்களிடம் கூறுவார். அவரது புத்திசாலித்தனங்கள் மட்டுமல்லாது, குறைகளையும் உங்களிடம் கூறுவார்.

10. காது கொடுத்து கேட்கும் பெண்

 காது கொடுத்து கேட்கும் பெண் உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா? புராஜெக்ட் வேலைகளை முடிப்பதில் சிரமமா என்பது போன்ற சில கேள்விகளின் மூலம் உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்து, உங்கள் குழப்பத்திற்கும், மன சங்கடத்திற்கும் தீர்வு கொடுப்பார்.

11. உங்களை மகிழ்விப்பார்

 உங்களை மகிழ்விப்பார் நீங்கள் இருவரும் ஒரே விசயத்திற்காக சிரிப்பிர்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது நேரம் போவது கூட தெரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக பேசிக்கொள்விற்கள். கேலிகள், கிண்டல்கள் என உற்சாகமாக இருக்கும். இருவரும் சேர்ந்து பல குறும்புத்தனங்களை செய்வீர்கள்.

12. உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண்

 உங்கள் குடும்பதிற்கு ஏற்ற பெண் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்களுக்கு பிடித்த பெண் இணைந்துவிட்டால் பல பிரச்சனைகள் தீரும். உங்களின் குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து நடந்துகொள்ள முடியும். பொறாமை எண்ணம் வராது.

13. ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார்

ஆடைகளை பற்றி அபிப்ராயம் கேட்கமாட்டார் எனக்கு இந்த ஆடை நல்லா இருக்குமா, இந்த கலர் நல்லா இருக்குமா என உங்களை வறுத்தெடுக்கமாட்டார். ஏனென்றால் தனக்கு என்ன பொருந்தும் என்பதில் தெளிவாக இருப்பார்.

 14. உங்களை ஆச்சரியப்படுத்துவார்
 உங்களை ஆச்சரியப்படுத்துவார் உங்களை ஆச்சரியப்படுத்தும் வித்தை கற்றவராக இருப்பார். உங்களை திடிரென வெளியில் அழைத்து சென்று ஆச்சரியப்படுத்துவார். அவர் செய்யும் மிகச்சிறிய விஷயம் கூட உங்களை பிரமிக்கவைக்கும்.

15. மனம் புண்படும்படி நடக்கமாட்டார்

 மனம் புண்படும்படி நடக்கமாட்டார் உங்களுக்கு தெரியாத ஏதேனும் ஒரு விஷயத்தை நீங்கள் தவறாக செய்தால், உங்கள் மனம் புண்படும்படி சிரிக்கமாட்டார். உங்களுக்கு தெரியாதவற்றை பொருமையுடன் சொல்லிக்கொடுப்பார்.


பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி?

பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி? இங்கு பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி? என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
இதை சிலர் நம்பலாம், பலர் நம்பாமல் போகலாம். இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார், அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்பட்டிருப்போம், கேட்டு அறிந்திருப்போம். இன்றைய அறிவியல் யுகத்தில் இதெல்லாம் நம்பும்படியாகவா? உள்ளது என்றும் நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

ஆனால், இன்றளவும் ஜோதிடம் பார்த்து, நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து அந்த நாளை துவங்கும் நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்..


#1 ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள். இவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.

#2 பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களுடைய மூட் அடிக்கடி மாறும்.

#3 மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள். மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.

#4 ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள். சிலர் பொறாமை குணமும் கொண்டிருபபார்கள். இது அவ்வப்போது வெடிக்கும். தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.

#5 மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம். இவர்களை அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.

#6 ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள். ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.

#7 ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை. மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள். அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.

#8 ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள். இவர்களுடன் மோத நினைக்க வேண்டாம். இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் அனைவராலும் ஈர்பார்.

#9 செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவார்.

#10 அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும். உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.

#11 நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.பொய்களை வேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள். உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மை மட்டுமே கேட்க விரும்புவார்கள்

#12 டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.

பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் !!!

பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் !!!தினமும் ராகு காலத்தில் ராகு பகவானையும்,துர்க்கையையும் வழிபட்டு வாருங்கள்.

ராகு மந்திரம்

ஓம் ப்ராம்  ப்ரீம் ப்ரௌம் ஸஹ ராகுவே நமஹ

துர்க்கா மந்திரம்

ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் 

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்


அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்

பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்

கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக

ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்

மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்

திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்

ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்

மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்

பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்

உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி

ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்

சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்

விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்

அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்

கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்

மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி

உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்

சதயம். ... ராகு. ... ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்

பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

உத்திராட்டாதி ... சனி. ... கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்