ஆடி வழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலை, எலுமிச்சை

ஆடி வழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலை, எலுமிச்சை..!!!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.
ஆடி வழிபாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலை, எலுமிச்சை
ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.
திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
===============================================================
ஆடி மாதமும் பெண்களும் !
தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு.
ஆடி மாதமும் பெண்களும்
தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு. ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாகும்.
இந்த நாட்களில் பெண்கள் உரிய முறைப்படி பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தால் அம்மனின் முழுமையான அருளைப் பெற முடியும். குடும்பத்துக்கு அச்சாணியாகத் திகழும் பெண்கள் ஆடி மாத வழிபாடுகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களது குடும்பம் மேம்படும் என்பது ஐதீகமாகும்.
இத்தகைய சிறப்புடைய ஆடி மாதம் நாளை (சனிக்கிழமை) பிறக்கிறது. நாளை முதல் ஊர் தோறும் “மாரியம்மா.... எங்கள் மாரியம்மா....” போன்ற பக்திப் பாடல்கள் எதிரொலிப்பதை கேட்க முடியும்.
ஆடி மாதத்தில் பெண்கள் என்னென்ன நாட்களில் வரும் விழாக்களில் பங்கெடுத்து கொண்டால் எத்தகைய நன்மைகளை பெற முடியும் என்பதை தெரிந்து வழிபாடு செய்வது வளர்ச்சியை தரும். படித்து அம்மனை வணங்கி ஆடி மாதத்தின் வழிபாட்டு பலன்களை பெற வாழ்த்துகிறோம்.