யார் இந்த வாஸ்து புருஷன்?

யார் இந்த வாஸ்து புருஷன்?

வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து பார்க்கிறார்கள். யார் இந்த வாஸ்து புருஷன் தெரியுமா?
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர்.
மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.
=======
வாஸ்து நாளில் பரிகார யாகம் !!!
கோவில்களில் சுவாமிக்கு தயிர்சாதம், வெண் பொங்கல், புளியோதரை என விதவிதமான சாதங்களை நைவேத்யம் செய்வது வழக்கம்.
ஆனால் திருச்சி மார்க்கெட் பஸ்ஸ்டாப் அருகிலுள்ள பூமிநாதசுவாமி கோவிலில் சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை போன்ற பூமிக்கடியில் விளையும் பொருட்களை நைவேத்யம் செய்கின்றனர். இந்தக் கோவில் வாஸ்து தோஷ பரிகாரத்தலமாகத் திகழ்கிறது.
வாஸ்து நாளன்று இங்கு யாகபூஜை நடக்கும். அன்று காலையில் சிவன் சன்னிதி முன், ஆறு கலசங்களுடன் அக்னி குண்டம் வளர்க்கப்படும். யாகபூஜை முடிந்ததும் கலச தீர்த்தத்தை சுவாமிக்கு மகாபிஷேகம் செய்வர்